ஆதார் அட்டை உச்சநீதிமன்ற தீர்ப்பு – மறுபரிசீலனை செய்ய மத்திய, மாநில அரசுகள் திட்டம்
ஆதார் அட்டை உச்சநீதிமன்ற தீர்ப்பு – மறுபரிசீலனை செய்ய மத்திய, மாநில அரசுகள் திட்டம்
ஆதார் அட்டை குறித்து அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தை அணுக மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. அரசு நலத்திட்ட உதவிகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஏற்கனவே ஆதார் அட்டையை அடையாளத்திற்காகவும், முகவரிக்காகவும் பயன்படுத்தி, மத்திய அரசின் ஜன்தன் திட்டத்தின் மூலம் 21 கோடி வங்கி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் வங்கிகள் எதன் அடிப்படையில் கடன் வழங்குவது என்பதில் குழப்பம் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தீர்ப்பை தெளிவுபடுத்துமாறு கூறி ரிசர்வ் வங்கி ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மத்திய அரசும், சில மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளன. 100 நாள் வேலைதிட்டம், ஜன்தன் திட்டம், வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ஆகியவை ஆதார் அட்டையை கட்டாயமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. தேர்தல் ஆணையமும் இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றத்தில் விடுக்க முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.