டெல்லியில் நாள்தோறும் சராசரியாக ஐந்து குழந்தைகள் மாயம்

டெல்லியில் நாள்தோறும் சராசரியாக ஐந்து குழந்தைகள் மாயம்

டெல்லியில் நாள்தோறும் சராசரியாக ஐந்து குழந்தைகள் மாயம்

 

டெல்லியில், கடந்த ஐந்து ஆண்டுகளில் நாள்தோறும் சராசரியாக ஐந்து குழந்தைகள் காணாமல் போவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். வீட்டில் பெற்றோருடன் பிரச்னை, பள்ளியில் ஆசிரியர் கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுவர்கள் வீட்டைவிட்டு வெளியேறுகின்றனர். ஏதோ ஒரு ஆவேசத்தில் வீட்டைவிட்டுக் கிளம்பும் சிறுவர்கள் ரயில் அல்லது பேருந்தை பிடித்து தெரியாத ஊர்களுக்கு சென்று தவிக்கின்றனர். சாலைகளிலோ, ரயில் நிலையங்களிலோ ஆதரவின்றி தனியாக நிற்கும் குழந்தைகளை குறிவைத்தே சில கும்பல் சுற்றிக் கொண்டு இருக்கின்றன. அவர்களை கடத்தும் கும்பல்கள், ஆண் குழந்தைகள் என்றால் கூலித் தொழிலாளியாகவோ, பெண் குழந்தை என்றால் பாலியல் தொழிலுக்கும் தள்ளிவிடுகின்றனர். இதனால், சிறுவர்களின் வாழ்க்கை பாதியிலேயே தொலைந்து விடுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், டெல்லிக்கு சுற்றுலா வந்த குடும்பம் ஒன்று இந்தியா கேட் வந்திருந்தது. அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது குழந்தை திடீரென மாயமானது. இதுகுறித்து பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்ததை அடுத்து, போலீசார் குழந்தைைய ேதடி வந்தனர். சில நாட்களுக்கு பின்னர் மேற்கு டெல்லியில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த முக்கிய சாலையில் மொட்டை அடித்த நிலையில் அக்குழந்தை மீட்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பின்னர், போலீசார் காணாமல் போன குழந்தைகளை மீட்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ‘பெஹ்சன்’, ‘ஸ்னெஹ்’ மற்றும் ‘மிலாப்’ போன்ற பெயர்களில் குழந்தைகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் சுமார் 1,200 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். அதில் 650 குழந்தைகள் எட்டு வயதில் இருந்து பன்னிரெண்டு வயதிற்கு உட்பட்டவர்கள் ஆவர். மூன்றில் ஒரு பங்கு பெண் குழந்தைகள்.

இதைதொடர்ந்து, போலீசார் புகார் பதிவேட்டில் இருந்து சோதனை செய்ததில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தினமும் ஐந்து குழந்தைகள் மாயமானது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: டெல்லியில் கடந்த ஐந்து ஆண்டுகளில், தினமும் ஐந்து குழந்ைதகள் காணாமல் போய் உள்ளனர். அதன்படி, ெமாத்தம் 8,470 குழந்தைகளை காணவில்லை. இதில், 4,602 பேர் ஆண் குழந்தைகள். 2,665 பேர் பெண் குழந்தைகள்.1,800 பேர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

டெல்லியில், குழந்தைகள் கடத்தல் கும்பல்கள் அதிகமாகிவிட்டது. காணாமல் போகும் குழந்தைகள் பெரும்பாலும் பன்னிரெண்டு வயதுக்குட்பட்டவர்களாக தான் இருக்கின்றனர். இதில், எட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 350 பெண் குழந்தைகள் உட்பட 830 பேரை தேடி வருகிறோம். போலீசாரின் மிலாப் நடவடிக்கையின் மூலம், மீட்கப்பட்ட 200 குழந்தைகள் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும், காணாமல் போன குழந்தைகளின் விவரங்கள் குறித்து சேகரித்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார்.

 

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்