மலேரியாவை குணமாக்கும் கல்வாழை

மலேரியாவை குணமாக்கும் கல்வாழை

மலேரியாவை குணமாக்கும் கல்வாழை

 

மலேரியாவை குணப்படுத்த கூடியதும், மஞ்சள் காமாலையை போக்கி கல்லீரலுக்கு பலம் கொடுக்கும் தன்மை கொண்டதும், புண்களை ஆற்றக் கூடியதும், பால்வினை நோய்களுக்கு மருந்தாக அமையும் கல்வாழையை பற்றி இன்று நாம் பார்ப்போம்.

அழகுக்காக தோட்டம் மற்றும் தொட்டியில் வளர்க்க கூடியது கல்வாழை. இது மலைப் பகுதிகளில் தானாக முளைக்க கூடியது. விதைகள் கல்லைப்போல் கெட்டியாக இருப்பதால் கல்வாழை என்ற பெயர் பெற்றுள்ளது. வாழையை போன்ற இலை, தண்டு மற்றும் கிழங்குகளை உடையது. பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். கல்வாழை இலைகள் பல்வேறு நன்மைகளை கொண்டது. இது பூஞ்சை காளான்களை போக்கும். நுண்கிருமிகளை அழிக்கும். வீக்கம் மற்றும் வலியை குறைக்கும். தொண்டை அழற்சிக்கு இலை மருந்தாகிறது.

கல்வாழையின் தண்டு பகுதியில் எடுக்கப்படும் நார்களை, சணலுக்கு பதிலாக பயன்படுத்தலாம். இலைகளில் இருந்து எடுக்கப்படும் நார், காகிதம் தயாரிக்க உதவுகிறது. கல்வாழை இலைகளை பயன்படுத்தி மலேரியா உள்ளிட்ட அனைத்துவகை காய்ச்சலை போக்கும் தேனீர் தயாரிக்கலாம். ஒரு டம்ளர் நீரில், இலைகளை சுத்தப்படுத்தி துண்டுதுண்டாக வெட்டி போடவும். அதனுடன் சிறிது மிளகுபொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்து குடிக்கவும். இதனால் காய்ச்சல் தணிக்கிறது. சளியை போக்குகிறது. நோய் நீக்கியாக பயன்படுகிறது. மஞ்சள் காமலைக்கு மருந்தாகிறது. கல்லீரலில் உள்ள வீக்கத்தை கரைக்கும்.

கல்வாழை கிழங்கு இஞ்சி இனத்தை சார்ந்தது. இந்த கிழங்கை பயன்படுத்தி மஞ்சள் காமாலை மற்றும் பால்வினை நோய்க்கான மருந்து தயாரிக்கலாம். கிழங்கின் மேல் பகுதியை நீக்கிவிட்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இதை 5 முதல் 10 கிராம் எடுத்துக் கொள்ளலாம். அதனுடன் அரை ஸ்பூன் சீரகம், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடிப்பதால், உடலில் சுறுசுறுப்பு ஏற்படும். பலத்தை கொடுக்க கூடியது.

பால்வினை நோய்களை தடுக்கும். ஈரல் நோய்களுக்கு மருந்தாகிறது. ஈரலை பலப்படுத்தும். ஈரல் வீக்கத்தை போக்கும். சிறுநீரை பெருக்கும். கல்வாழை பூக்களை பயன்படுத்தி புண்களை விரைவில் ஆற்றும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். பூக்களை மசித்து, தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலபதத்தில் காய்ச்சி எடுத்துக் கொள்ளவும் வேண்டும். இதை பூசுவதன் மூலம் தோல் நோய்கள் சரியாகிறது. அடிபட்ட காயங்களை ஆற்றக்கூடியது.

ரத்தத்தை உறைய வைத்து புண்களை விரைவில் ஆற்றும். ஓரிரு சொட்டு எண்ணெய்யை மூக்கில் விடுவதன் மூலம், மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நின்றுபோகும். பல்வேறு நன்மைகளை கொண்ட கல்வாழை இலைகள் தொண்டை அழற்சி, காயத்தை போக்க கூடியது. மலேரியாவுக்கு மருந்தாகிறது. கிழங்கு பால்வினை நோய்க்கும், ஈரல் நோய்களுக்கும் அற்புதமான மருந்தாகிறது.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்