துளசி இலைகளில் மருத்துவ புரதங்கள் கண்டுபிடிப்பு: தமிழக மாணவர்கள் சாதனை

துளசி இலைகளில் மருத்துவ புரதங்கள் கண்டுபிடிப்பு: தமிழக மாணவர்கள் சாதனை

துளசி இலைகளில் மருத்துவ புரதங்கள் கண்டுபிடிப்பு: தமிழக மாணவர்கள் சாதனை

 

துளசி இலைகளில் மருத்துவம் மூலதாரமாக விளங்கும் புரதங்களை கண்டுபிடித்து தமிழக மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். துளசியை சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளாக சிறந்த மருந்தாக நாம் பயன்படுத்தி வருகிறோம். துளசியை தொடர்ந்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. துளசி செடியில் இருக்கும் மருத்துவ குணங்கள் அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் மருத்துவ உலகில் இதுவரை துளசியின் மருத்துவ குணங்கள் எந்த புரதங்களால் உருவாகிறது என்பது கண்டுபிடிக்கப்படவி்ல்லை. இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள நேஷ்னல் சென்டர் பார் பயோலாஜிகள் சையின்ஸ் கல்லூரியை சேர்ந்த பேராசியர் சவுதா மணி தலைமையில் செயல்பட்ட மாணவர்கள் குழு துளசியில் மருத்துவ மூல ஆதாரமாக விளங்கும் புரதங்களை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

முதலில் துளசியின் மரபு அணுவை எடுத்து இந்த குழு 3 லட்சம் பகுதியாக பிரித்து பின்பு அதை ஒன்றாக அவற்றை தொகுத்துள்ளனர். இந்த செயலின் மூலமாக துளசி செடியில் உள்ள மரபு அணுவில் இருக்கும் மருத்துவ குணங்கள் கொண்ட ராசாயனங்கள் என்ன என்ன என்று தெரியவந்துள்ளது. துளசி செடியில் இளைகளில் தான் அதிக மருத்துவம் குணங்கள் கொண்ட ராசாயனங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

துளசியில் உள்ள மருத்துவ புரதங்கள் கொண்ட ராசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் வரும் காலங்களில் இந்த புரதங்களை வேறு செடிகளில் புகுத்தி அந்த புரதங்களை வேறு செடிகளில் உட்புகுத்தி அந்த புரதங்களை மிகுதியாக உற்பத்தி செய்து மருத்துவ சாதனை செய்ய வழிவகுக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இடம் பெற்றிருந்த பேராசியர் சவுடா மணி உட்பட 8 பேரும் தமிழர்கள் என்பது குறிப்படத்தக்கது.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்