ஒரு கண் மூடி தூங்கும் டால்ஃபின்

ஒரு கண் மூடி தூங்கும் டால்ஃபின்

ஒரு கண் மூடி தூங்கும் டால்ஃபின்

 

டால்ஃபின்கள்  என்றும் கடல் பன்றி என்றும் குறிப்பிடப்படுகின்றன. இந்திய தேசிய நீர் விலங்கு என்று இதனை கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தது மத்திய அரசு. இவற்றில் ஒரு வகையான நன்னீர் வாழ் டால்ஃபின் இனமும் உண்டு. கங்கை நதியில் கங்கை டால்ஃபின் என ஒரு இனம் முன்பு ஏராளமாக நீந்திக் கொண்டிருக்கும். கங்கை நதிநீர் ஏகப்பட்ட கழிவுகள் கலந்து மாசு பட்டதால் இவை கிட்டத்தட்ட அழிந்தேவிட்டன என்கிறார்கள் உயிரியலாளர்கள்.

இவை தூங்கும் போது ஒரு கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு தான் தூங்கும். அப்பொழுது வலது கண் திறந்து இருந்தால் இடது பக்க மூளை வேலை செய்யும். இடது கண் திறந்திருந்தால் வலது பக்க மூளை வேலை செய்யும். தூங்கும் போது இவை மிக மெதுவாகவே நீந்தும்.

டால்ஃபின்கள் தம் பற்களை இரையைப் பிடிக்க மட்டுமே பயன்படுத்தும். உண்ணும் போது பற்களால் கடிக்காமல் அப்படியே விழுங்கி விடும். டால்ஃபின்களில் சுமார் 40 வகையான இனங்கள் உள்ளன. பெரும்பாலானவை சுமார் 30 நிமிடங்கள் வரை தண்ணீருக்கடியில் மூச்சை அடக்கிக் கொள்ளும் திறன் உடையவை.

கூரான உடல் அமைப்பைக் கொண்டுள்ளதால், இவை வேகமாக நீந்தும். அதாவது மணிக்கு 41 கி.மீ. வேகத்தில் நீந்தும். இருபது ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை இவை. அமெரிக்க ராணுவத்தினர் டால்ஃபின்களின் உடலில் கேமராக்கள் பொருத்தி, கண்காணிப்புக்கும் பயன்படுத்துகிறார்கள். அறிவுக்கூர்மை வாய்ந்த விலங்குகளில் இவையும் ஒன்று. இவை உலகமெங்கும் காணப்படுகின்றன என்றாலும், ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் அதிகமாகக் காணலாம்.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்