ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை ரத்து: சென்னை மாநகராட்சி உத்தரவு

ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை ரத்து: சென்னை மாநகராட்சி உத்தரவு

ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை ரத்து: சென்னை மாநகராட்சி உத்தரவு

 

அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்றும் அதனை முக்கிய ஆவணமாக கருத வேண்டாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

ஆனால் ஆதார் அட்டை எடுக்கும் பணியை மக்கள் தொகை கண்கெடுப்பு துறை தீவிரப்படுத்தி வருகிறது.

டிசம்பர் மாதத்திற்குள் அந்த பணியை நிறைவு செய்ய திட்டமிட்டு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை மற்றும் திருப்பூர் மாவட்டங்கள்தான் ஆதார் அட்டை பெறுவதில் பின் தங்கியுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் ஆதார் அட்டை குறிப்பிட்ட இலக்கை எட்டும் நிலையில் உள்ளது. சென்னை மாவட்டத்தில் 78 சதவீதம் பேர் ஆதாருக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனால் புகைப்படம் எடுக்கும் பணியும், ஆதார் மையங்களும் அதிகரித்துள்ளது. சிறப்பு முகாம்கள் அமைத்து ஆதார் புகைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி 15 மண்டலங்களிலும் இந்த பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை ரத்து செய்ய பரிந்துரைக்குமாறு மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து வருவாய்துறை ஊழியர் ஒருவர் கூறுகையில், ‘‘வீடு வீடாக சென்று ஆதார் அட்டை பெறப்பட்டுள்ளதா என்று சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை இல்லாதவர்களின் பட்டியலை தயாரித்து அவர்களுக்கான ரேஷன் மற்றும் வாக்காளர் அட்டை ஆகியவற்றை ரத்து செய்ய சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்யப் பட உள்ளது’’ என்றார்.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்