திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளிடம் விரைவில் உண்மை கண்டறியும் சோதனை

திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளிடம் விரைவில் உண்மை கண்டறியும் சோதனை

திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளிடம் விரைவில் உண்மை கண்டறியும் சோதனை

 

திருச்சி சுங்கத்துறை மண்டல அலுவலகத்தில் பல்வேறு கடத்தல் சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
 

இப்படி பறிமுதல் செய்யப்பட்டு லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த தங்க கட்டிகளில் 35 கிலோ தங்கம் மாயமானது கடந்த ஏப்ரல் மாதம் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள சி.பி.ஐ.போலீசில் மண்டல ஆணையர் ஜானி கொடுத்த புகாரின் பேரில் டி.எஸ்.பி. கண்ணன் தலைமையிலான குழுவினர் சுங்கத்துறை அலுவலகத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே லாக்கர் கண்காணிப்பாளர் முகமது பாரூக், ஆய்வாளர் செந்தில் குமார் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் 2 பேர் மீதும் மதுரை சி.பி.ஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஆனால் 35 கிலோ தங்கம் மாயமாகி 7 மாதங்களாகியும் இதுவரையிலும் யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில் சி.பி.ஐ. தரப்பில் மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவில், சஸ்பெண்டு செய்யப்பட்ட லாக்கர் கண்காணிப்பாளர் முகமது பாரூக், ஆய்வாளர் செந்தில் ஆகிய 2 பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மனு வருகிற 15–ந்தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் இருவரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.ஐ. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்த சோதனைக்கு பிறகு 35 கிலோ தங்கம் மாயமான வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் இதில் தொடர்புடைய மேலும் பல சுங்கத்துறை அதிகாரிகளிடையே மீண்டும் ‘கிலி’ ஏற்பட்டுள்ளது.

 

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்