மெக்டொனால்ட்ஸ் பற்றிய வியக்க வைக்கும் சுவாரஸ்ய தகவல்கள்

மெக்டொனால்ட்ஸ் பற்றிய வியக்க வைக்கும் சுவாரஸ்ய தகவல்கள்

மெக்டொனால்ட்ஸ் பற்றிய வியக்க வைக்கும் சுவாரஸ்ய தகவல்கள்

 

முதலில் “Dick” McDonald , “Mac” McDonald என்ற இவர்கள் தான் மெக்டொனால்ட்ஸ் எனும் இந்த உணவகத்தை நடத்தி வந்தனர். மெக்டொனால்ட்ஸ், 1955ஆம் ஆண்டு நிறுவன உரிமம் (Franchised) என்ற பெயரில் இவர்களுடன் இனைந்து ரேமெண்ட் ஆல்பர்ட் க்ராக் என்பவர் கிளைகளை தொடங்கினார்.

பிறகு இவர்களுக்கு இடையில் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாட்டினால் சில வருடங்களில் அந்த இரு சகோதரர்களிடம் இருந்து மொத்த உரிமையுயும் 2.7 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கிவிட்டார் ரேமெண்ட் ஆல்பர்ட் க்ராக். பிறகு ஐந்து ஆண்டுகளில் 200 கிளைகளும் பத்தே ஆண்டுகளில் பங்கு சந்தையிலும் இடத்தை பெற்றது மெக்டொனால்ட்ஸ்

அமெரிக்கர்கள் வேலை வாய்ப்பு எட்டில் ஒரு அமெரிக்கருக்கு மெக்டொனால்ட்ஸ் வேலை வாய்ப்பு அளிக்கிறது.

புதிய ரெஸ்டாரண்ட் ஒவ்வொரு 14.5 மணிநேரத்திற்கும் ஓர் புதிய ரெஸ்டாரண்ட் கிளையை உலகில் எங்கேனும் புதிதாய் திறக்கிறது மெக்டொனால்ட்ஸ்.

68 மில்லியன் ஒரு நாளுக்கு ஏறத்தாழ 68 மில்லியன் மக்கள் மெக்டொனால்ட்ஸில் உணவருந்துகிறார்கள். இது ஒட்டுமொத்த யூ.கே-வின் மக்கள் தொகையைவிட பெரியது.

பொம்மைகள் உலகிலேயே அதிகமாக பொம்மைகளை விநியோகம் செய்வதில் மெக்டொனால்ட்ஸ் முதலிடத்தில் இருக்கிறது.

இங்கிலாந்து மகாராணி இங்கிலாந்தின் மகாராணி பக்கிங்ஹாம் பேலஸ் அருகில் மெக்டொனால்ட்ஸ் கிளை ஒன்றை சொந்தமாக வைத்திருக்கிறார்.

சப்வே உலகிலேயே அதிகளவிலான கிளைகள் கொண்டுள்ளது மெக்டொனால்ட்ஸ் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், இவர்களைவிட சப்வே அதிகமான அளவில் கிளைகள் கொண்டுள்ளனர்.

75 மில்லியன் டாலர்கள் ஒருநாளுக்கு மட்டுமே மெக்டொனால்ட்ஸ் 75 மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கின்றனர்.

ஊதியம் ஒரு மெக்டொனால்ட்ஸ் ஊழியர் ஏழு மாதத்தில் ஊதியமாக வாங்கும் தொகையை, மெக்டொனால்ட்ஸின் முதன்மை நிர்வாக அதிகாரி ஒரு மணி நேரத்தில் சம்பாதிக்கிறார்.

பிட்சா 1970-களில் மெக்டொனால்ட்ஸ் பிட்சாவும் விற்றுக் கொண்டிருந்தார்கள்.

ஃபாஸ்ட் புட் வேண்டாம் மெக்டொனால்ட்ஸ் அவர்களது ஊழியர்களுக்காக நடத்தும் ஓர் இணையத்தில், ஃபாஸ்ட்புட்டை தவிர்த்து விடுங்கள் என்று கூறியிருக்கிறது.

185 கிலோமீட்டர் நீங்கள் அமெரிக்காவில் இருந்தீர்கள் என்றால், நீங்கள் மெக்டொனால்ட்ஸ் கிளையை விட்டு 185 கிலோமீட்டர்களுக்கு அப்பால் செல்ல முடியாது. ஏனெனில், அவ்வளவு கிளைகள் இருக்கின்றன.

உருளைக்கிழங்கு அமெரிக்காவில் விளையும் உருளைக்கிழங்குகளில் 7% மெக்டொனால்ட்ஸ் சிப்ஸ் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்