மல்லிகையின் மருத்துவ குணங்கள்
மல்லிகைப் பூ, பெண்களின் அழகை அதிகரிக்கும் பெண்களுக்கு பிடித்த ஓர் மலர். பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் கூட மல்லிகை பிடிக்கும். மல்லிகைப் பூவும், அல்வாவும் காலம் காலமாக திருமண ஜோடிகள் விரும்பும் ஓர் சிறந்த ஜோடி. மல்லிகைப் பூவில் மருத்துவ குணங்கள் இருப்பதே பலருக்கு தெரியாது.
அதிலும் பெண்கள் சூடும் மல்லிகை ஆண்களுக்கும் நல்லது என்று வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். வயிற்றில் இருக்கும் பூச்சிகளை அழிக்க, சிறுநீரக கற்களை கரைக்க, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, தலைவலி போக்க என பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு இது சிறந்த தீர்வளிக்கிறது…
வயிற்றில் பூச்சிகள் வெளியூர்களில் தங்கியிருக்கும் நபர்கள் அதிகமாக ஹோட்டல் உணவு உட்கொள்வதால் அவர்களது வயிறு மற்றும் குடல்களில் பூச்சிகள் உருவாக வாய்ப்புகள் அதிகம். இதனால் உடல் மெலிதல், சருமத்தில் வெள்ளை திட்டுகள் போன்றவை ஏற்படலாம். நான்கு மல்லிகை பூவை நீரில் இட்டு கொதிக்க வைத்து அந்த நீரை பருகி வர இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வுக் காண இயலும்.
கொக்கி, நாடாப் புழு இவ்வாறு மல்லிகைப் பூ இட்டு கொதிக்க வைத்த நீரை பருகி வருவதால் கொக்கி புழு, நாடாப் புழு போன்றவற்றை அழிக்க முடியும்.
சிறுநீரக கற்கள் மல்லிகைப் பூக்களை நிழலில் காயவைத்து அதை பொடியாக்கி நீரில் கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து விடும் என்று கூறப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் ஒன்றிரண்டு மல்லிகைப் பூக்களை உண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்.
தலைவலி அவ்வப்போது ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளுக்கு மல்லிகைப் பூ சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. சிலர் மல்லிகைப் பூவின் வாசம் தலைவலியை ஏற்படுத்தும் என்று கூறுவதுண்டு. ஆனால் மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்துப்போடுவது தலைவலியை குறைக்குமாம்.
மல்லிகைப் பூ எண்ணெய் மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகையான எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக திகழ்கிறது.
சுளுக்கு, வீக்கம் உங்களுக்கு எங்காவது அடிபட்டு சுளுக்கு அல்லது வீக்கம் ஏற்பட்டால் மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் அந்த வீக்கம் குறையும்.
மன அழுத்தம் மன அழுத்தம் அதிகம் இருக்கும் பெண்கள் மல்லிகைப் பூவை சூடினால் போதுமாம் இது உடல் சூட்டை குறைத்து, மன அழுத்தத்தை குறைக்கிறது.
மல்லிகை வகைகள் காட்டு மல்லிகை, ஊசி மல்லிகை, சாதி மல்லிகை, குட மல்லிகை என பல வகைகள் இருக்கின்றன. இவை அனைத்திற்கும் ஒரே மாதிரியான மருத்துவ குணங்கள் தான் இருக்கின்றன.