கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண, சீரமைப்பு பணிகள் குறித்து ஜெயலலிதா விளக்கம்

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண, சீரமைப்பு பணிகள் குறித்து ஜெயலலிதா விளக்கம்

பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சேத நிவாரண உதவி தொகையை உயர்த்தி ஆணையிட்டுள்ளதாகவும், பெருமழை ஏற்படும் சேதத்தை தவிர்க்க இயலாது எனவும் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார். பெருமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண, சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் கடலூர் மாவட்டத்தில் 683-க்கு 635 கிராம ஊராட்சிகளில் மின்சேவை சீரமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள ஜெயலலிதா, மின்விநியோகம் இல்லாத கிராமங்களில் ஜெனரேட்டர் உதவியுடன் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளர்.
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது என்றும், சாலை போக்குவரத்து முறையாக நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். வடலூர் – கும்பகோணம் நெடுஞ்சாலையும் போக்குவரத்துக்கு ஏதுவாக சீரமைக்கபட்டுள்ளது என்றும், கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 27 பேர் குடும்பத்துக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
 
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்துக்கு 11,407 குடிசைகள் முழுமையாக சேதமடைந்துள்ளது என்றும், 53,149 குடிசைகள் பகுதியாக சேதமடைந்து உள்ளதாக கணக்கீடு செய்யப்பட்டுள்தாக என ஜெயலலிதா தகவல் அளித்துள்ளார். குடிசையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
மருத்துவ சிகிச்சை
 
40 மருத்துவ முகாம்கள் மூலம் 8,885 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 127 சிறப்பு கால்நடை முகாம் மூலம் 20,743 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், 3,335 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜெயலலிதா தகவல் அளித்துள்ளார்.
 
73 டன் கால்நடை தீவனம் விலையேதுமின்றி வழங்கப்பட்டுள்ளது என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டத்தில் போர்கால அடிப்படையில் மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 83,000 பேருக்கும் மாநகராட்சி மூலம் உணவு பொட்டலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்றும், காஞ்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 7,294 பேர் 26 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்