காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறும் : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலையாக இருந்தது தாழ்வு பகுதியாக மாறியுள்ளது என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் கடலோர, வடமாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. வடகடலோர மாவட்டத்தில் அதிகபட்சம் 60 கி.மீ. வேகத்துக்கு காற்று வீசும் என்றும், நாளை முதல் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உள்மாவட்டங்களி்ல் பரவலாக மழை பெய்யும் என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஒட்டப்பிடாரம், மணியாச்சி, ஸ்ரீவைகுண்டம், உத்திரமேரூர், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.