விஜயகாந்தின் பலருக்கும் தெரியாத சாதனைகள் மற்றும் தகவல்கள்

விஜயகாந்தின் பலருக்கும் தெரியாத சாதனைகள் மற்றும் தகவல்கள்

விஜயகாந்தின் பலருக்கும் தெரியாத சாதனைகள் மற்றும் தகவல்கள்
1. 1980 களில் இருந்து 2005 வரை தொடர்ந்து மூன்றாம் இடத்தை தக்கவைத்துகொண்ட கதாநாயகன்
2. பல புதுமுக இயக்குனர்களை அறிமுகபடுத்திய hero/producer. திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர் விஜயகாந்த்.
3. புலன் விசாரணை படத்தில் சத்யராஜை நடிக்க கேட்டபோது புது இயக்குனர் படத்தில் நடிக்கமாட்டேன் என்று சத்யராஜ் மறுத்துவிட்டார். விஜயகாந்த் எந்த நிபந்தனையும் இல்லாமல் நடித்தார் (40 வயது, கதாநாயகி கிடையாது, ஹீரோவுக்கு பாடல் கிடையாது, 15 வயது பெண்ணுக்கு அப்பா - 15 வயது பெண்ணுக்கு அப்பா என்பதை அப்போது எந்த ஹீரோவும் விரும்பவில்லை)
4. கேப்டன் பிரபாகரன் - அவரது 100 வது படம், சொந்த தயாரிப்பு. இப்போது இருக்கும் கதாநாயகர்கள் கூட இப்படி ஒரு தலைப்பை ஒப்பு கொள்ளமாட்டார்கள். விடுதலை புலிகளின் தலைவர் பெயர் பிரச்சனை வேண்டாம் என்று ஒதுங்கிதான் போய் இருப்பார்கள்.
5. அவரது தலைமுறையில் 100 வது படத்தில் ஜெயித்த ஒரே ஹீரோ. ரஜினி (ராகவேந்திரா - தோல்வி), கமல் (ராஜபார்வை - தோல்வி), பிரபு (ராஜகுமாரன் - தோல்வி), சத்யராஜ் (வாத்தியார் வீட்டு பிள்ளை - தோல்வி), சரத்குமார் (தலைமகன் - தோல்வி), கார்த்திக் (100 வது படம் அவருக்கே தெரியாது, உள்ளத்தை அள்ளி தா வெற்றியை 100 வது படமாக கொண்டாடினர்), முரளி 99*, 100 வது படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.
6. The May Day என்ற ஆங்கில படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தமானது யாருக்கும் தெரியாது. Eli My Friend என்ற ஆங்கில படத்தில் யானை பாகனாக நடிக்க பிரபு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இரண்டு படங்களுமே கைவிடப்பட்டது.
7. புகழின் உச்சியில் இருந்த ராதா இவரோடு நடிக்க மறுத்து விட்டார். ராவுத்தர் அதிக சம்பளம் பேசி அடுத்த மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடிக்க வைத்தார். ராதாவை தொடர்ந்து ராதிகா, ரூபினி, பானுப்ரியா ஆகியோர் வரிசையாக மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யபட்டார்கள்.
8. ராவுத்தர் பிலிம்ஸ், I V சினி creations , கேப்டன் சினி creations , தமிழன்னை creations இவை எல்லாம் விஜயகாந்தின் சொந்த நிறுவனங்கள். இதில் வெளியான அணைத்து படங்களுக்கும் கதையை ராவுத்தர் பிலிம்ஸ் கதை team தான் எழுதி இருக்கும். கிட்டத்தட்ட அணைத்து படங்குளுமே வெற்றி படங்கள்தான். வெளி படங்களில் நடித்து ஒரு படம் தோற்றாலும் அடுத்த படத்தை அவரது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்து வெளி இடுவார்.
9. ராதிகாவோடு கல்யாணம் வரை போய் நின்றுவிட்டது, வேறு எந்த நடிகையுடனும் கிசு கிசுக்க பட்டது இல்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார்.
10. புரட்சி தலைவர் MGR என்ற பெயரில் இருந்து புரட்சியையும், கலைஞர் கருணாநிதியில் இருந்து கலைஞர் என்பதையும் சேர்த்து புரட்சி கலைஞர் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.
11. நடிகனாக இருக்கும்போது 100 ருபாய் சம்பாதித்தால் 10 ருபாய் தானம் செய்யவேண்டும் என்ற கொள்கையை பின்பற்றியவர். இன்றும் சென்னை rickshaw ஓட்டுனர்களுக்கு இவர்தான் அடுத்த இதய தெய்வம், அவ்வளவு உதவிகள் செய்து இருக்கிறார்.
12. ஓரே ஆண்டில் 18 படத்தில் நடித்தவர், ஷுட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு வருபவர் கடீன உழைப்பாளி...
13. நடிகர் சங்க தலைவர்களில் இவர்தான் BEST , எல்லா கடன்களையும் அடைத்தார். இவரது சிறப்பான நிர்வாகத்திற்கு ரஜினி, கமலை வைத்து இவர் நடத்திய கலை நிகழ்ச்சி பெரிய சாட்சி.
14. செந்தூரபாண்டி (விஜய்காக), பெரியண்ணா (சூர்யாவுக்காக), SA சந்திரசேகரன் கேட்டபோது மறுக்காமல் கௌரவ வேடத்தில் நடித்து கொடுத்தார்.
15. தன் படத்தில் போஸ்ட் மேன் கேரக்டர் கூட நடிக்க தகுதி இல்லாதவர் விஜயகாந்த் என்று சொன்ன பாரதி ராஜா, விஜயகாந்த் பீக்கில் இருக்கும்போது நடிக்க கேட்டபோது மறுக்காமல் தமிழ்செல்வன் என்ற படத்தில் நடித்து கொடுத்தார்.
16. பூந்தோட்ட காவல்காரனுக்கு சிறப்பாக இசை அமைத்ததற்காக இளையராஜாவிற்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கியவர் இவர்.
17. விஜய்சேதுபதிக்கு முன்னோடி விஜயகாந்த், பல படங்களில் 40 வயதுக்காரராக இளம் வயதிலேயே நடித்து இருக்கிறார் (ஊமை விழிகள், புலன் விசாரணை, செந்தூர பூவே, சத்ரியன் ....)
18. ரமணா படத்தின் கடைசியில் சந்தோசமாக செத்து போவார், தெலுங்கில் சிரஞ்சீவி சாக மறுத்தார், அதனால் அந்த படத்தை AR முருகதாஸ் இயக்க மறுத்து, அதற்கு பதிலாக ஸ்டாலின் என்ற படத்தை இயக்கி கொடுத்தார்.
19. தன் கல்லூரியை 90 கோடிக்கு ஜேப்பியாரிடம் அடமானம் வைத்து சொந்த பணத்தில் முதல் தேர்தலை சந்தித்தவர் (MGRக்கு பிறகு சொந்த பணத்தில் முதல் தேர்தலை சந்தித்தவர் இவர்தான்)...

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்